பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 201

எவ்வளவு பெரிய காரியத்தைச் சாதிக்கச் செய்துவிட்டான்? விதையை நடுவதா பெரிது? அது நன்றாகத் தவிர்த்துச் செடியாகி மரமாகிச் சேதமுறாமல் வளர்ந்து பூவும் காயு மாகப் பூத்துக் குலுங்கினால் அல்லவா மரம் நட்டவனின் மனம் பூரிக்கும்? அந்தப் பூரிப்பை எனக்குப் பூரணமாக ஆண்டவன் அளித்து விட்டான்’ என்று எண்ணி மகிழ்ந்தார் பாகவதர்.

கலோவின் நெக்லெஸ் கிடைத்துவிடும்’ என்று காரியதரிசி சொல்லிப் போனதும், லட்சுமியம்மாளும் மற்ற வர்களும் நகையே திரும்பக் கிடைத்து விட்டாற்போலத் தான் மகிழ்ந்தனர். சுசீலாவுக்குப் போன உயிர் திரும்பி வந்தாற் போலிருந்தது. ஆனால் பாகவதரோ, நகை பறி போனவுடன் எப்படிப் பதறாமல் அமைதியாக இருந்தாரோ அப்படியே நகை கிடைத்துவிடும் என்ற செய்தியைக் கேட்ட தும் அமைதியாகவே இருந்தார்.

லட்சுமியைக் கண்டதும் பாகவதர் கையில் இருந்த நோட்டுக்களையெல்லாம் கொடுத்து, ‘பத்திரமாக எடுத்து உள்ளே வை. வேலூரில் எனக்குக் கச்சேரிக்கு வந்திருக்கிறது. அட்வான்ஸ் பணங்கூட வாங்கியாகி விட்டது. எல்லாரும் தமாஷாகப் போய் விட்டு வருவோம். என்ன சொல்லுகிறாய்?’ என்று மகிழ்க்சி புடன் கேட்டார்.

கையை நீட்டி அட்வான்ஸ் வாங்கியாகி விட்டது. கச்சேரி பண்ண முடியாவிட்டாலும் ஏதாவது தமாஷா வாவது பண்ணிவிட்டு வாருங்கள். வேலூரிலெ உங்களுக் குத் தெரிந்த மனிதர்கள் யாராவது இல்லாமலா போய் விடுவார்கள், காப்பாற்றுவதற்கு? வீணாக எங்களுக்கு வேறு எதற்கு அநாவசியச் செலவு?’ என்றாள் லட்சுமி யம்மாள் சிரித்துக்கொண்டு.

உடனே பாகவதர் சுந்தரியின் பக்கம் திரும்பி, - சுந்தரி, பார்த்தாயா உன் அக்காவை? வாயில்லாப்

பு. இ.-13