பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புல்லின் இதழ்கள்

வழங்குவதில் அவளுக்கு இணை அவளே. அதனால்தானே என்னவோ, கடவுளின் அன்புக்கே அவள்வரையில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது.

“கன்னிகாதான பலன் கிட்டவேண்டும்’ என்று கருதி, ஏழு வயது காயத்திரியை, மாப்பிள்ளை என்ற பத்து வயது மணிப் பயலுக்குத் திருமணம் செய்து வைத்தார் பாகவதர். ஆனால் அவர் விரும்பியபடி கன்னிகாதான பலன் கிட்டியதே தவிர, கன்னிப்பெண் காயத்திரிக்கு வாழ்வு தான் கிட்டவில்லை. மணமான நாலைந்து மாதங்களுக்குள்ளேயே அவள் விதவை ஆகிவிட்டாள். ஆம்-கணவன் என்ற பதவியில் இருந்த பத்து வயது மணி, கையில் கிட்டியிருந்த கனியைப் பற்றி அறியாமல், தோட்டத்திலுள்ள மாங்கனிக் காக மரத்திலேறிக் கீழே விழுந்து உயிரை விட்டான்.

இப்படி மலராமலே வாழ்க்கையை முடித்துக்கொண்ட காயத்திரியின் கதையை அவளொத்த வயதில் அந்த வீட்டை யடைந்த ஹரியினால் அப்போது புரிந்துகொள்ள முடிய வில்லை. அவளுக்காக அநுதாபப்பட தெரியவில்லை. ஆனால் இப்போது-பத்து வருஷங்களுக்குப் பிறகு அதன் ஆழம், தன்மை, வேதனையின் வேகம் எல்லாம் அவனுக்கு விளங்கின. ஆனால் அவள் யாருடைய அநுதாபத்தையும் ஆறுதலையும் விரும்பாமல், எதிர்நோக்காமல் அவற்றுக்கு அப்பாற்பட்டவளாகத் தன்னை மாற்றிகொண்டு நின்றாள். இப்படியே காயத்திரியின் நினைவில் நின்று நின்று ஹரிக்கு கால்கடுத்துக் காலம் கரைந்ததே தவிர, உள்ளே சென்ற காயத்திரியையும் காணோம்; எண்ணெயையும் கானோம். மாறாக, உள்ளேயிருந்து வந்த காரசாரமான விவாதங்களே அரைகுறையாக அவன் செவிகளைத் தாக்கின.

காயத்திரியிடம், ஒரு முறை எண்ணெய்க் குளி தவறி விட்டால்தான் என்ன? அதற்காக நீ ஏன் கொண்டு போய்க் கொடுக்கவேண்டும்? என்ற சுசீலாவின் கேள்வி யு, ம் தாயின் சமாதானமும் அவன் செவிகளில் தேய்ந்து ஒலித்