பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்குறுதி 219.

ஹரியை, இரு கண்ணப்பா’ என்று முனியம்மாள் கையமர்த்தினாள்.

அருகில் இருந்த பக்கிரியின் இரு கைகளையும் சட்டென்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணிர் வடித்தபடியே அவள், ‘தம்பி, என் தலை மேலே அடித்துச் சத்தியம் பண்ணு. நெசம்மா ஒனக்கு இந்த நெக்லெஸைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா? கண்ணப்பன் சொல்லறதெல்லாம் பொய்யா? ஏன் தயங்கறே? இப்போ | உண்மையை மறச்சு: இதெல்லாம் நெசமாயிருந்தா நான் இந்தக் குழந்தைங்களை கிணத்திலே தள்ளிப் போட்டு; நானும் விழுந்து செத்துப் போயிடுவேன். போலீசு வர்றத்துக்குள்ளே உள்ளதைச் சொல்லி நகையைக் கொடுத்துட்டு ஓடிப்போயிடு. கண்ணப்பனுக்குத் தெரிஞ்ச அந்தக் கலெக்டர் காலிலே விழுந்தாச்சும் உன்னனக் காப்பாத்தச் சொல்லறேன். நெசத்தை மட்டும் மறைச்சுப் புடாதே’ என்று இரு கண்ணிலும் நீர் வழியக் கேட்டாள்.

பக்கிரி மலைத்துப் போய் அக்காவின் முகத்தையே, மற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அணு அணுவாக உயிரை விட்டுக் கொண்டிருந்த அவளுக்கு அவனைக் காப்பாற்றுவதில் இருந்த ஆர்வமும், அவனிடம் இருந்த பாசமும் அவனது நெஞ்சைத் தொட்டன. இறுகப் பற்றியிருந்த அவளுடைய கரங்களிலிருந்து தன் கரத்தை மெல்ல இழுத்துக் கொண்டான். சொற்கள் அவனது உதடுகளிலிருந்து தயங்கித் தயங்கி வெளி வந்தன.

‘அக்கா, நான் இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் தப்புத்தான். ஆனால், நான் இங்கே வந்தப்புறம்-அதுவும் உன்னைப் பார்த்த பிறகு என் மனசு ரொம்பக் கஷ்டப் பட்டுப் போச்சு. நிறைய சம்பாதிச்சு உன்னைச் சுகமா வைக்கணும்னு எனக்கு ஆசை. சக்தியை மீறித்-தகுதியை மீறி நிறைய சம்பாதிக்க உலகத்திலே ரெண்டு மூணு