பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புல்லின் இதழ்கள்

தாகவும் ஒன்று எழுதி ஸ்டேஷனில் சேர்த்து விட வேண்டும். முடியுமா?’ என்று பக்கிரி கேட்டதும் ஹரி சிரித்தான்.

- என்ன மாமா, இதுதான் சிங்கப்பூர் வேலையா? நகை கைக்கு வருவதற்கு முன்னால் இப்படி எழுதிக் கொடுக்கும் அளவுக்கு எந்த முட்டாள் இருப்பான்? திருடியதும் போதாதென்று; அதிலிருந்து மீளுவதற்கு இப்படி ஒரு தந்திரம் என்னிடமே செய்கிறாயா?* என்றான்.

உடனே பக்கிரி, சரி, என்னை மன்னித்துவிடப்பா, என்னிடம் உனக்கு நம்பிக்கை இருக்கும் என்ற நினைப் பில் பேசி விட்டேன். நகை கிடைத்ததுமாவது உடனே எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய். அது ரொம்ப முக்கியம். நீ சொன்ன அடையாளப்படி இன்று இருட்டுகிற நேரத்தில் உன்னை உங்கள் வீட்டு வேலியோரமாகச் சத்திக்கிறேன். “நீ கொல்லையில் கிடந்தது’ என்று சொல்லி, வீட்டில் சேர்த்துவிடு. கடிதமும் மறக்காதே. அதுவரை நான் தலைமறைவாகத் தான் இருக்க வேண்டி வரும்’ என்று பக்கிரி பேசிக்கொண்டிருந்த போதே வீட்டு வாசலைத் தாண்டி ஜீப் ஒன்று வந்து நின்றதுஅதில் பின்புறம் இருந்த இரண்டு போலீஸ்காரர்களைக் கண்டதும் பக்கிரி ஹரியை அப்படியே பரபரவென்று இழுத்துக்கொண்டு ஒரே ஒட்டமாக எவர் கண்ணிலும் படாமல், கொல்லையை நோக்கி ஓடினான். இருவரும் சுவரைத் தாண்டினர்.

‘நீ உள்ளே இருந்தால் இருவருக்குமே ஆபத்து. நம் திட்டமெல்லாம் தவிடுபொடியாகிவிடும். அதனால் தான் உன்னையும் கையோடு இழுத்துக்கொண்டு வந்து விட்டேன். அக்காவைப் பற்றிக் கவலையில்லை. அது சமாளிச்சுக்கும். நீ மறந்துடாமே இருட்டினதும் வேலி கிட்டே வந்துடு’ என்று கூறிய பக்கிரி வடக்கு நோக்கி