பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 புல்லின் இதழ்கள்

ஆனால் ஹரி எதையும் லட்சியம் செய்யாமல் பக்கிரி’ ஜபமே செய்துகொண்டிருந்தான்.

பாகவதர் அவனிடம், பஞ்சு அண்ணாவும் ராஜப்பா வும் வந்ததைக் கூறினார். அவர்களையே வேலூரிலும் கரூரிலும் சபாக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதா கவும், ஹரியின் அட்வான்ஸிலிருந்து அவர்களுக்கு முன் பணம் தரவேண்டும் என்றும் சொன்னார்.

  • உன் பணம், அட்வான்ஸ் என்று குருநாதர் குறிப் பிடும் போது முன்பாக இருந்தால், ‘என்னை அவர்களிட மிருந்து பிரித்துப் பேசுகிறார்களே. எனக்கென்று எதற் காகத் தனிப்பணம், தனிச் சுகம்?’ என்றுதான் எண்ணி யிருப்பான். ஆனால் இப்போது அவன், தன்வரையில் அந்தக் குடும்பத்துடனேயே ஒன்றிவிட்டவனாக இருந் தாலும், அதையும் மீறித் தனக்கென்று அதாவது தன்னைப் பெற்று வளர்த்த குடும்பத்துக்காகவாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனை வாட்டியது. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டிய, மணமான பெண்ணின் நிலையில் அவன் இருந்தான். வாக்களித்தபடி வருமானத்தில் ஒரு பகுதியையாவது அவர்களுக்கு அவன் கொடுத்தாக வேண்டும். இதைத் தன் பொறுப்பில் நிறைவேற்ற முடி யாது என்பதை அவன் உணர்ந்தான். குருநாதரிடம் அனைத்தையும் கூறி, அவர் கருத்துப்படி நடப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை. அதுவே அவன் மனத்துக்கு நிரந்தரமான நிம்மதியைத் தருகிற வழியாகவும் தோன்றியது. ஆனால், அதை அவரிடம் கூறத் தக்க தருணத்தை எதிர் பார்த்திருந்தான்.

சிந்தனையைத் தொடர்ந்து பொழுதும் ஒடிக் கொண்டு தான் இருந்தது. விதை தூவி விட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயியைப் போல் பக்கிரியை