பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 புல்லின் இதழ்கள்

அடப் போக்கிரி! இந்த வயசிலேயே உனக்கு இத்தனை பொறாமையா? இரு, இரு. முதுகில் இரண்டு வைக்கிறேன்’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டு அதன் அருகில் சென்ற காயத்திரி மறு கணம் சிலை போல் பிரமித்து நின்றாள்.

கையிலிருந்த லாந்தர் வெளிச்சித்தில் கன்றுக்குட்டி யின் கழுத்தில் சுசீலாவின் நெக்லெஸ் டால் அடித்தது.

காயத்திரியின் உடம்பெல்லாம் குப் பென்று வியர்த் துக் கொட்டியது. உலகத்திலுள்ள பயமெல்லாம் ஒன்று திரண்டு வந்து அவளை அப்பிக் கொண்டது.

சுசீலாவின் கழுத்திலிருந்த நெக்லெஸை அறுத்துக் கொண்டு போனவன் அதைக் கன்றின் கழுத்தில் கட்டிய மர்மம் அவளுக்குத் தெரியும்; ஆனால் அந்தத் திருடன் இன்னும் போகாமல் கொல்லையிலேயே ஒளிந்துகொண்டி ருந்தால்?’ என்று எண்ணிப் பார்த்தவுடன் காயத்திரிக்கு உச்சிமுதல் உள்ளாங்கால் வரை ஓர் உலுக்கு உலுக்கியது. அங்கே விநாடியும் தாமதிக்கத் தைரியமில்லாமல் நெக்லஸைக் கழற்றிக் கொண்டு தன் தாயாரின் அருகில் ஒடி வந்தாள். *

என்னடி, ஏன் கத்தியது?’ என்று லட்சுமியம்மாள் விசாரித்தாள்.

ஒரு நிமிஷம் என்ன பதில் சொல்லுவதென்று காயத்திரி தயங்கினாள். பிறகு சட்டென்று, சும்மாதான் அம்மா கத் தியிருக்கிறது. போட்ட வைக்கோல் அப்படியே இருக் கிறது. போனவுடன் கழுத்தை நீட்டுகிறது. சொரிந்து கொடுக்க வேண்டுமாம். முதுகில் நாலு வைத்து விட்டு வந்தேன்’ என்று பளிச் சென்று பதில் கூறினாள்.

== * எல்லாம் நீ செய்து காட்டியிருக்கிற பழக்கந்தானே சந்தோஷம் வந்தால் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சு