பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புல்லின் இதழ்கள்

எண்ணெயைப் போக்கச் சிகைக்காய் உண்டு, எண்ணெயால்

எழுந்த வேதனையைப் போக்கக் காவிரிக்கும் வலிமை இல்லையே!

தண்ணிரில் மூழ்கி எழுந்தான் ஹரி. குருநாதரின் துணி

களை எல்லாம் சிரத்தையுடன் துவைத்து அலசிக் கல்லின் மேல் பிழிந்து வைத்தான். சுருள் சுருளான அவனது அழகிய கேசத்திலிருந்து சிவந்தமேனியில் வழிந்துகொண்டிருந்த தண்ணிருடன், அவனது இமை வழி இறங்கிய கண்ணிரும் கலந்தது. குளித்ததனால் உடற்புழுக்கம் தணிந்தது; ஆனால் மனப் புழுக்கம் தணிய மருந்து ஏது? தலையைத் துவட்டிய போது அவன் எதிர் மண்டபத்தைக் கவனித்தான்.

சுவரில் எழுதிய சித்திரம் போல் அசைவற்று அதைப் பார்த்தபடியே அவன் ஒரு கணம் நின்றான். இளமை நினைவுகள் அவனை ஈர்த்தன.

வயிற்றுக்குச் சோறில்லாமல் வீட்டிலிருந்து அடித்துத் துரத்தப்பட்ட பாலகன் ஒருவன் இனியகுரலில், மனம் போனபடி, சங்கீத விதி எதற்கும் கட்டுப்படாமல், காலைப் பொழுதில் அந்த மண்டபத்தில் பாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு அடுத்த வேளை உணவு இல்லையே என்ற நினைப்பு இல்லை. கடந்த நாள் இரவு பட்டினி கிடந் தோமே என்ற எண்ணம் இல்லை. நாம் என்ன பாடுகிறோம், யாருக்காகப் பாடுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், யாருக்கும் அஞ்சாமல், குரலை உயர்த்திப் பாடிக் கொண்டி ருந்தான்.

“வள்ளிக் கணவன் பேரை

வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளம் குழையுதடி கிளியே, ஊனும் உருகுதடி கிளியேஊனும் உருகுத’ .'