பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 புல்லின் இதழ்கள்

நான் உள்ளே போய்க் காரியங்களை கவனிக்கிறேன் நீ வசந்திக்குப் பாடத்தை எடு. இன்று தங்கி விட்டு நாளை போகலாம் என்றால் கேட்க மாட்டேன் என்கிறாய்; ஏன் அங்கே அப்படி என்ன அவசரம்?’ என்று கேட்டாள்.

உடனே அருகிலிருந்த வசந்தி, தாயாரிடம், நீ சும்மா இரு அம்மா. எல்லாம் நாளைக்குப் போனால் போதும். இன்று போவதைப் பார்க்கிறேன். சுசீலாவிடம் ஒரு நாளைக்கு பேச்சு வாங்கா விட்டால் ஒன்றும் மோச மில்லை’ என்றாள்.

சுந்தரி, ‘சரிதான், இப்பொழுதே கேலி பண்ண ஆரம்பித்து விட்டாயா?’ என்று செல்லமாக மகளைக் கடிந்து கொண்ட வண்ணம் அடுக்களையை நோக்கிப் போனாள்.

ஹரி, சுந்தரி கூறிய இப்பொழுதே யின் பொருளைத் தேடி ஆராய்ச்சிப் பண்ணிக் கொண்டிருந்தான்.

“ஏன் இப்படி விழிக்கிறீர்கள்? நாளைக்குப் போனால் போதும் என்றவுடன் சுசீலா பயம் பிடித்து விட்டதா? இனிமேல் அவள் ஏதாவது உங்களிடம் வாயாடினால் நான் சும்மா விடப் போவதில்லை’ என்று கூறிய வண்ணம் வசந்தி தம்பூராவை மீட்டினாள்.

“இப்பொழுது எனக்கு என்ன புதிதாய்க் கிரீடம் முளைத்து விட்டது. இனிமேல் அவளை நீ சும்மா விடாமல் இருப்பதற்கு’ என்று எண்ணியபடி வசந்தியிடம், ஆமாம், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சுசீலாவின் நெக்லெஸ் கிடைத்து விட்டது. வந்ததுமே சொல்ல மறந்து விட்டேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினான் ஹரி.

“ஆமாம். இதுதான் எனக்கு இப்போது ரொம்பக் கவலை. பெரிய ஜயாயிரம் ரூபாய் வைர நெக்லெஸ் பறி