பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண் பழி 249

என்ன? அதைப் பற்றியெல்லாம் விசாரிக்கவோ, கண் டிக்கவோ இவள் யார்? என்ன உரிமையில் இவள் இப்படி ஹரியையும் மற்றவர்களையும் விரட்டிக் கொண்டிருக் கிறாள்? இவளை இப்படியே வளர விடுவது தவறு. என்கிற முடிவுக்குக் காயத்திரியின் மனம் வந்தது.

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்ததைப் போல் பாகவதர் உடம்பில் இனிப் புதிதாய் ஊசிகுத்த இடமில் லாமல் படுத்திருந்தார்,

ஹரி சம்பாதிக்கிற பணமெல்லாம், மருந்தாகவும் மாத்திரையாகவும், ஊசியாகவும் மாறிமாறிப் பாகவதரின் உடம்பில் சென்றது. கை நிறையச் சோற்றை யெடுத்துச் சாப்பிட முடியாமல்; வாய் நிறைய மருந்தைக் குடித்துத் கான் பாகவதர் உயிரைப் பிடித்துக்கொண்டிருந்தார்.

நெஞ்சுவலி குறைவாக இருந்தால்: வயிற்றுவலியால் புழுப்போல் துடித்தார். நாபியிலிருந்து குரலை எழுப்பிப் பந்தல் கோடியில் இருப்பவன் வரை கேட்க தேவகான மாகப் பொழிந்தவர்; கட்டிலில் படுத்து நரகவேதனைப் பட்டுக்கொண்டிருந்தார். வயிற்றில் அல்லர் உருவாகி வருக்கிறதாம். ஒரு பருக்கை விழுந்தால் ஊசி குத்துவது ால் வலித்தது. வர வரச் சாப்பாடே மருந்தாகியது. பார்த்துப் போகிறவர்கள் எல்லாம் கண்ணிர் பெருக்கினர். பாகவதருடைய பொன்னான மனத்துக்கும், நல்லெண்ணத் துக்கும் இப்படிப்பட்ட அவஸ்தைகள் என்ன நியாயம்?

பாகவதர் இறந்தகாலத்தைப் பற்றி எண்ணிப் பார்த் ா. அவரைப் போலவே இன்று ஹரியும் இசை உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறான். இந்த மகிழ்ச் வியும் ஆத்ம திருப்தியுமே அவரது உடலுக்கும் உள்ளத் பக்கும் ஆறுதல் அளிக்கும் மருந்தாக இருந்தன. ஹரிக்கு

பு. இ.-16