பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 புல்லின் இதழ்கள்

ஏராளமாகக் கச்சேரிகள் நடக்கிறபடியால் அவனும் பாதி நாள் ஊரிலேயே இருப்பதில்லை.

நாளுக்கு நாள் பெருகிவரும் பணத்தின் தேவையை யும், காத்திருக்கிற வைத்தியச் செலவுகளையும் ஹரி மனத்திற்கொண்டு தனக்கு வருகிற ஒரு கச்சேரியைக் கூடத் தவறவிடாமல் உழைத்துப் பாடினான். குருவைப் போல் தொழில் பண்ணினான். ஆனால் அவரைப்போல் பணத்தைத் துச்சமென்று மதிக்கவில்லை.

ஹரியினுடைய பெயரும் புகழும் நாளுக்கு நாள் பெருகி, பெரிய பெரிய சபைகளிலெல்லாம் அவனுடைய கச்சேரிகள் ஏற்பாடாயின. கல்யாண சீசனில் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் அவனுடைய கச்சேரி நடந்தது. பணம் இல்லாவிட்டாலும், தன்னை அழைக்கும் உற்சவக் கச்சேரிகளுக்கும் அவன் போகாமல் இருப்பதில்லை. ஆனால் அவன் செய்கிற ஒரு கச்சேரியி லாவது அவனைக் கல்யாணி பாடாமல் ரசிகர்கள் விட மாட்டாாகள்.

ஹரியும் மறுக்காமல் ரசிகர்கள் விரும்பிக் கேட்டதை யெல்லாம் பாடிவிட்டுத்தான் எழுந்திருப்பான். பத்திரி கைகளில் அவனுடைய பெயர் அடிக்கடி வந்தது. இதனால் பக்கிரியும், ஹரியை அடிக்கடிச் சந்தித்துக் குடும்பச் செலவுக்குப் பணம் கேட்கத் துவங்கினான்.

பாகவதருக்குத் தெரியாமல் ஹரி எந்தக் காரியமும் செய்வதில்லை. அவரே பக்கிரியின் விருப்பத்துக்கேற்ப ஹரியை அவனுடைய ஏழைக் குடும்பத்துக்கு அதிகம் உதவும்படி கூறினார். ஹரியும் அதன்படியே செய்தான்.

அப்பாவின் உடல்நலக் குறைவுக்குப் பிறகு, அதையே ஒரு காரணமாகக் கொண்டு சுசீலா பாட்டை நிறுத்தி