பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண் பழி 251

விட்டாள். ஆனால் வசந்திக்குப் பாடம் சொல்லி கொடுக்க ஹரி போவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்காக ஹரியைக் கண்டித்து: அங்கே போகக்கூடாது என்று தடுக் கவோ, உத்தரவு போடவோ அவளுக்குத் தைரியமில்லை . எனவே-வசந்திக்குப் பாடம் எடுத்து விட்டு வந்தால் எதையாவது வைத்துக்கொண்டு ஹரியை வம்புக்கு இழுத்து அவன் மனத்தைப் புண்படுத்தால் இருக்கமாட்டாள்.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஒரு நாள் ஹரியின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. நோட் டிவில் ஹரியின் பெயரைப் பார்த்து சுற்று வட்டார மக்கள் வந்துகூடி;விட்டனர். மின்சார விளக்குகளினாலும், வண்ண வண்ண மலர்களினாலும் தெப்பம் மிக அழகாக

அலங்கரிக்கப் பட்டிருந்தது.

சுவாமிக்குப் பக்கத்தில் கச்சேரி செய்வதற்கான மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் தெப்பத்தில் அமர்ந்து கச்சேரி கேட்க மிகவும் முக்கிய மானவர்களும், பிரபலஸ்தர்தர்களும், கோயிலைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுமே அநுமதிக்கப் பட்டிருந்தனர். ஹரி வருவதற்கு முன்பே தெப்பத்திலும், கரையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருத்தனர்.

முறிப்பிட்ட சமயத்துக்கு ஹரி கச்சேரி செய்யும் மேடையில் வந்து அமர்ந்தான். பக்கவாத்தியக்காரர்கள் எல்லாம் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர். சுருதி

சேர்த்துக் கொண்டு:ஹரி குருவை நினைத்துப் பாடத் துவங்கினான்.

மகிழ்ச்சியூட்டும் மனோகரமான இரவு நேரத்துப் பக்திப் பரவசச் சூழ்நிலை: மெல்லிய அலையெழுப்பிச் சுற்றி வரும் தெப்பம்; கடலிலிருந்து அலைகள் எழுவதே