பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புல்லின் இதழ்கள்

துக்கத்தையும் ஏற்படுத்தின; என்றாலும் முனியம்மாவிடம் எதிர்த்துப் பேசி அவள் மனத்தைப் புண்படுத்த அவனுக்கு விருப்பம் இல்லை. மூத்த மனைவி காத்தாயி சாகிறபோது தன் ஒரே மகன் கண்ணப்பனைப் புருஷன் தலையில் கட்டி விட்டு இறந்தாள். பிறகு தன் வயதையும் வருமானத்தையும் பொருட்படுத்தாமல் இரண்டாந்தாரமாகத் தனக்கு வாழ்க் கைப்பட ஒப்புக்கொண்ட இளம் பெண் முனியம்மாவிடம் பெரியசாமிக்கு அளவுக்குமீறிய மதிப்பு ஏற்பட்டது என்ப தோடு காதலும் இருந்தது.

ஆயினும் அதற்காக மகனைத் துன்புறுத்தவோ வாட்டி வதைக்கவோ அவனுக்கு விருப்பம் இல்லை. ஆனால்கண்ணப்பன் தன் பேச்சை லட்சியம் செய்வதில்லை என்று. முனியம்மா சமயம் வாய்த்த போதெல்லாம் கணவனிடம் கூறிக் கண்ணை கசக்கிக்கொண்டும் இருந்தாள். பெரியசாமி யின் மனம் ஆசைக்கும் பாசத்துக்கும் ஈடு கொடுக்க முடியா மல் தவித்தது. இந்த நிலையில்தான் ஒரு விபரீதம் நிகழ்ந்தது.

அரசூரை அடுத்த கிராமத்தில் பூங்குளம் மைனரின் கல்யாணம் நடந்தது. பெரிய கல்யாணம்; அந்தக் காலத்து ஐந்து நாள் கல்யாணம். சுற்று வட்டாரத்திலுள்ள அத்தனை கிராமத்து மக்களும், ஐந்து நாளும் அங்கேதான் முகாம் இட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பந்தலில் வைதிகக் காரியங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்: இன்னொரு பக்கம் சங்கீதக் கச்சேரி இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கும். காரணம் கல்யாண வீட்டுக்காரரான பூங்குளம் மைனர் பெரிய பணக்காரர் என்பதோடு சிறந்த சங்கீத ரசிகராகவும், எல்லாச் சங்கீத வித்துவான்களுக்கும் மிகவும் வேண்டியவராகவும் இருந்தார். அதனால் அந்தக் கல்யாணத்தில் சங்கீதக் கச்சேரிக்குப் பிராதான்யம் இருந்தது. வந்திருந்த வித்துவான்கள் அனைவருக்கும் சண்மானங்களை வாரி வாரி வழங்கினார் மைனர். கச்சேரி நடக்கிற இடத்திலேயே சாப்பாட்டையும் மறந்து பழி