பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) சைப் போட்டி 293

வேண்டாம். லதாங்கி பாடலாம். நான் அரை மணி பாடுகிறேன். நீங்கள் வந்த சங்கதி வராமல், ஒரு பணி பாடவேண்டும்.’

- லதாங்கியையா?’ ஹரி பெருமூச்சுடன் கேட்டான்.

ஏன்? கல்யாணியில் காட்டுகிறீர்களே உங்கள் கைவரிசையை எல்லாம்; இதிலும் காட்டுங்கள். எப் பொழுது பார்த்தாலும் எந்தக் கச்சேரியிலும் கல்யாணி தானா? ஒன்றில் நீங்களாக அதை ஆரப்பித்துவிடு கிறீர்கள்; அல்லது ரசிகர்கள் அதைக் கேட்காமல் விடுவ இல்லை. ஏன்? கல்யாணியைப் போலவே எழுபத்திரண்டு மேள கர்த்தா ராகங்களையும் அத்தனை பிரமாதமாக உங் களைப் பாட வைக்கட்டுமா? ஆனால் இந்தச் சாதைனக்கு நீங்களும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும்; சரிதானா?’’ பதிலை எதிர்பார்த்து அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹ-ம். சரி, ஆரம்பி. கரும்புத் தின்னக் கூலியா?” என்றான் ஹரி சிரித்துக்கொண்டே.

காந்தாமணி மகிழ்ச்சியோடு கண்களை மூடிக்கொண்டு இசையில் மூழ்கிப் போனாள். மீட்டுகிற அவள் விரல் நுனிகளிலிருந்து தம்பூரா வழிப் பாய்ந்து பரவிய நாத வெள்ளம், அறை முழுவதும் நிரம்பியது. சற்றைக் கெல்லாம் அவள் லதாங்கியாகவே மாறிவிட்டாள். பூனை அவள் காலடியில் உறங்கிக் கொண்டிருந்தது.

ஹரி பிரமிப்போடு அவள் பாடுகிற அழகைப் பார்த் துக்கொண்டும்; கேட்டுக்கொண்டும் இருந்தான். காந்தா மணியின் கற்பனைத் திறன் அவனைத் திணற அடித்து விடும் போலிருந்தது. இனிப் பாட என்ன மீதம் வைத் திருக்கிறான்? ஒரு மணி நேரம் இன்று இவளுக்கு நான் எப்படிப் பதில் சொல்லி மீளப் போகிறேன்?- என்று