பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவிப் பிடித்துக் கொண்டாள். ஆனால் அதே சமயம் ஹரி அப்படியே சுருண்டு தன் மீது விழுந்ததை அவள் எதிர் பார்க்கவேயில்லை. வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. திடுக்கிட்டுப் போன அவள் பரபரப்புடன் அவனைத் தாக்கித் தன் மடியில் கிடத்திக்கொண்டு ‘அம்மா!’ என்று அலறிய அலறல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது. விழித்துக் கொண்ட பூனை எதையோ கண்டு பயந்து விட்டது போல் படிக்கட்டுகளின் வழியே பாய்ந்து ஓடியது.

விளையாட்டுப்போல நாலு நாட்கள் ஒடிப்போய் விட்டன. தஞ்சாவூர்ப் பாடத்துக்குச் சென்ற ஹரியை இன்னும் காணவில்லை என்றவுடன் வீட்டிலுள்ள எல்லா ருமே தவியாய்த் தவிர்த்துக் கொண்டிருந்தனர். பாக வதரும் லட்சுமியம்மாளும் சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆயின. வாய் ஓயாமல் அவனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

கவலைப்பட அவன் பச்சைக் குழந்தை அல்ல; என் றாலும் கவலையாக இருந்தது. திருவிடைமருதுரருக்கும் வரவில்லையாம். பஞ்சு அண்ணாவும் ராஜப்பாவும் ஊரில் இல்லாததனால் அங்கே போய்த் தேடவேண்டிய அவசியம் இல்லை என்று பாகவதர் தடுத்துவிட்டார். பின் எங்கே போயிருப்பான் என்பது யாருக்குமே புரியாவிட்டாலும், பாகவதருக்கும் காயத்திரிக்கும் உள்ளுற ஒரு விதச் சந்தேகம் இருந்தது.

ஒருவேளை அரசூருக்குப் போயிருப்பானோ, அல்லது பக்கிரியினால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? இப் போது அரசூருக்குப் போகவேண்டிய அவசியம் இல்லையே! அவன் அப்படி அந்தக் குடும்பத்துடன் எவ்விதத் தொடர்பும் கொண்டாடுபவன் அல்லவே! அரங்கேற்றத் துக்கே செல்ல மறுத்தவனாயிற்றே. ஆனால் பக்கிரியைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?