பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 புல்லின் இதழ்கள்

ஹரிதான் அவன் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத் துக்கொண்டு வருகிறானே. பின் எங்கே தான் போயிருப் பான்? ஒருவேளை தஞ்சாவூரிலேயே இருக்கிறானோ? புறப் பட்டுப்போய் ஒரு நடை பார்த்து வருவதற்கு இல்லாவிட்டா லும், தந்தி அடிப்பதற்குக்கூட விலாசம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ள வில்லையே!’ என்று பாகவதர் கவலைப்பட்டுப் புலம்பிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு லட்சுமியம்பாள் பிரமை பிடித்தாற்போல் மூலையில் இடிந்து போய் உட் கார்ந்திருந்தாள்.

சுசீலா மட்டும் அடிக்கொரு தரம் எல்லாரிடமும் சீறி

விழுந்துகொண்டே இருந்தாள். தஞ்சாவூரிலே எந்தக் கல்யாணராமன் வீடு என்று யார் கண்டார்கள்? எங்கே போய்த் தேடுவது?” என்று திரும்பத் திரும்பக் கூறினாள்.

“இத்தனை சாமர்த்தியமாய் இப்போது பேசுகிறவள்: நீதான் அவன் போய் வருகிற இடத்து விலாசத்தைக் கேட்டுக் குறித்து வைத்துக் கொள்ளுவதற்கு என்ன? ஏன் செய்யவில்லை?’’ என்று லட்சுமியம்மாள் பொறுக்க முடியாமல் சுசீலாவிடம் கோபித்துக்கொண்டாள்.

வீட்டில் நடக்கும் இத்தனையையும் பார்த்துக்கொண்டு ஒன்றும் தெரியாதவள் போல்; ஒன்றுமே கூற முடியாமல் காயத்திரி தவித்துக் கொண்டிருந்தாள்.

“நிச்சயமாக ஹரி தஞ்சாவூரில் காந்தாமணியின் வீட்டில்தான் இருக்க வேண்டும். ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தினால்தான் அவன் அங்கே தங்கியிருக்க வேண்டும்; போன இடத்தில் அங்கே அவர்களில் யாருக்கு என்ன உடம்போ, ஹரி உதவிக்குத் தங்கி விட்டான் போல இருக்கிறது. இருந்தாலும் ஒரு கடிதங்கூடவா போடக் கூடாது?’ என்று எண்ணிய காயத்திரி சிறிது மனவேதளை கொண்டாள்.