பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. பெரிய விலாசம்

தஞ்சாவூருக்குப் பாடத்துக்குப் போனவனைக் கான வில்லையே என்று, பாகவதர் கவலைப்பட்டுக் கொண் டிருந்தார். அவரோடு சேர்ந்து, வீட்டிலுன்ள அனைவருமே துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். அந்த துயரத்துக்கு மத்தியில் ஹரியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. போன இடத்தில் உடம்பு சரியில்லாமற் போய் விட்டதென்றும், இப்போது சற்றுக் குணம் என்றாலும், மிராசுதார் விட்டினர் பிடிவாதமாக இரண்டு நாள் தங்கி, உடம்பை பூரணக் குணப்படுத்திக் கொண்டு போகலாம் என்று வற்புறுத்துவதனால், வியாழன் காலை புறப்பட்டு வருவ தாகவும் எழுதியிருந்தான்.

அதைப் படித்ததும் பாகவதர் பதறிப் போனார்.கண்காணாத இடத்தில், உடம்பு சரியில்லாமற் எதற் காகத் தங்க வேண்டும்? ஆளை அனுப்பலாம் என்றாலும், விலாசங்கூட அவன் எழுதவில்லையே! அவர்கள் அவனை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டுமே சங்கீதக் கலைக்கே அவன் பொக்கிஷமாயிற்றே. சுவாமிநாதன் தாம் அவனைக் காப்பாற்றி அனுப்பி வைக்க வேண்டும்’ என்று சதா வேண்டிக் கொண்டேயிருந்தார். லட்சுமி யாலும் கணவருடைய இதே வார்த்தைகளைத்தான் எதிரொலிக்க முடிந்தது.

காயத்திரி மட்டும், ஹரிக்கு ஒன்றும் நேர்ந்து விடாது.

ஒரு குறைவுமில்லாமல் காந்தாமணி கவனித்துக் கொள் வாள். ஹரிக்குப் பெண்களிடம் அபிமானத்தைப் பெற்று