பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 புல்லின் இதழ்கள்

தாளி ஊருக்குப் புறப்பட்டு விட்டதைப் புரிந்து கொண்டு - காசு மாமா, காசு மாமா’ என்று ஹரியைச் சூழ்ந்து கொண்டன.

பையிலிருந்து எட்டனா நாணயங்களாக எடுத்து, ஐந்து குழந்தைகளின் கையிலும் ஹரி கொடுக்கும் போதே ஒரமாக இருந்த சற்றுப் பெரிய பையனும் தலையைச் சொறிந்து கொண்டே, மாமா’ என்று லேசாக முன கினான். ஹரி, அவன் கையிலும் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தான். அப்போது அங்கே வந்த நாராயணசாமி * பளார்’ என்று பையன் முதுகில் ஒர் அறை வைத்து, - தரித்திரங்களா ! உங்களாலேயே இந்த வீட்டுக்கு யாரா வது வரவேண்டுமென்றாலே, பயப்படுகிறார்கள். தொழிலே பாதி போயாச்சு வாங்கோ, எல்லாருமாச் சேர்ந்தே பிச்சை எடுக்கப் புறப்படலாம்’ என்று சீறி விழுந்தார்.

ஹரி, நாராயணசாமியைக் கண்டித்தான். குழந்தை களைக் கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் என்ன அந்நியனா?’ என்று சமாதானப் படுத்தினான்.

அப்படியில்லை சார், இதுகளுக்கு வேற்று முகமே கிடையாது. யாரைப் பார்த்தாலும்; வந்ததும கழுத்தைக் கட்டிக் கொள்ளவேண்டியது: போகும் போது காசுகேட்க வேண்டியது: கடைக்கு ஒட வேண்டிது அவ்வளவு

தான்.”

-

. போகிறது, அந்த வித்தையையாவது கற்றுக்கொண் டிருக்கிறார்களே!’

‘வித்தையா இது? அத்தனையும் சொத்தைகள். பெரிசிலிருந்து, சிறிசுவரை ஒன்றாவது தேறாது. அத் தனையும் அசடுகள். மானம் போகிறது’’ என்று அலுத் துக்கொண்டே ஹரியின் கையில் ஒரு பையைக் கொடுத் தார் நாராயணசாமி.