பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. இலவு காத்த கிளி

கட்டிலில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் வசந்தி. உள்ளத்துப் பாரமெல்லாம் கண்ணிராய்க் கரைந்து போகும்வரை அழுதாள். மாடியில் இருந்து வரும் மகளின் விம்மலைக் கீழே இருந்த சுந்தரி கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். பெண்ணைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாமல்; எழுந்து செல்லவே தெம்பு இல்லாதவள் போல்; அவள் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. எத்தனை நேரந் தான் அவளாலும் அழ முடியும்?

காய்ந்த இரண்டு கோடுகளாய்க் கண்ணிர், சுந்தரியின் அழகிய முகத்திலும் கரைகட்டியிருந்தது. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு; மீண்டும் விழுந்த பேரிடியையும் தாங்கிக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். -

முதல் அடி- அவளுடைய பதினாறு வயதில் விழுந்தது, செல்வச் செழிப்போடு, இளமை அழகும் பூத்துக் குலுங்க உள்ளத்தில் ஆயிரமாயிரம் கற்பனைகளோடு மகிழ்ந்திருந்த வேளையில் தான் அந்தப் பேரிடி விழுந்தது.

குருவாக எண்ணி அவள் பூஜித்தவர் கணவன் ஸ்தானத் திற்கு விண்ணப்பித்து; பணிவுள்ள சிஷ்யையாக, அடக்கத்

துடன் வாழ்ந்து வந்த அவளை மனைவியின் ஸ்தானத்திற்கு ஆளாக்கிவிட்ட io.

அந்த மிகப் பெரிய அதிர்ச்சியை அவள் ஒரு சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளாமல்; தனக்கென்று எவ்வித விரும்பும் வெறுப்பும் வைத்துக் கொள்ளாமல், கணவரின்