பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. பட்டணப் பிரவேசம்

பூ மலர்வதுபோல் மெல்ல மெல்லப் பொழுது விடிந்து ‘ காண்டிருந்தது. ஒடும் காரிலிருந்த பாகவதரின் குடும்பத்தினர் அந்த அழகிய காட்சியைக் கண்டனர். குருநாதர் சொல்லிக் கொடுத்திருந்த உதயகால ஸ்தோத்திரத்தை ஹரி மனத்துக்கள் சொல்லிக் கொண் டிருந்தான்.

மாற்றங்கள் வானத்தில் மட்டும் நிகழ்ந்து கொண் டிருக்கவில்லை; மண்ணிலும் பளிச்சிட்டன. தாம்பரத்தைத் தாண்டியதிலிருந்தே, கிராமச் சூழ்நிலை மாறிக் கொண்டே வந்தது. குடிசைகளும் கூரை வீடுகளும் பின் தங்கிப் பங்களாக்கள் பூத்து நின்றன.

மியூசியம் ரோடிலுள்ள ரோஸ் கார்டன்ஸ் கேட் முன்னால் கார் நின்றது. கூர்க்கா இரும்புக் கேட்டைத் திறத்து விட்டான். வாசலில் கோலம் போட்டுக் கொண் டிருந்த பெண்ணொருத்தி காரின், நம்பரைப் பார்த்து விட்டு உள்ளே ஒடினாள். சற்றைக்கெல்லாம் டாக்டர் சேகரும், அவர் மனைவி சந்திராவும் வாசலுக்கு வந்து அவர்கள் எல்லாரையும் வரவேற்று அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஹரி பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அறிமுகக் கடிதம் பத்திரமாக இருந்தது. ஆனால் அதற்கு, அவசியமே இல்லாதது போல் அவர்களுக்கு வரவேற்புக் கிடைத்தது. *