பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணப் பிரவேசம் 389

உங்கள் வீடு. யாருக்கும் சங்கோஜமே கூடாது’ என்று கூறிவிட்டு, நான் நர்ஸிங்ஹோம் போய் வண்டி அனுப் புகிறேன். நீங்கள் உங்கள் செளகரியம் போல் புறப்பட்டு வாருங்கள்’ என்று விடைபெற்றுச் சென்றார்.

சாமன்களையெல்லாம் ஒர் அறையில் ஒழுங்காக அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் காயத்திரி. சுசீலா ரோஸ் கார்டன்ஸ் செடிகளையும், மலர்களையும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். லட்சுமியம்மாள், சந்திரா விடம், இங்கே கோயில் உண்டா?’ என்று கேட்டாள்.

“இருக்கிறது; என்ன வேண்டும் அத்தை உங்க ளுக்கு?’ என்று சந்திரா கேட்டாள்.

சாயங்காலம், இவ்வளவு நல்ல மனிதர்களிடம் கடவுள் எங்களைக் கொண்டு வந்து சேர்த்ததற்காக, சுவாமிக்கு ஒர் அர்ச்சனை பண்ணிவிட்டு வர வேண்டும். பிறகுதான் பாக்கி எல்லாம்’ என்று லட்சுமியம்மாள் கூறிறவுடன், * அத்தை-நல்ல அத்தை’ என்று சிரித் தாள் சந்திரா.

பிற்பகல், பாகவதர் நர்ஸிங் ஹோமுக்குப் போனார். மாலை எல்லாரும் அங்கே போனார்கள்.

டாக்டரிடம், உடம்பு எப்படி இருக்கிறது? எத்தனை நாள் இங்கே தங்கும்படியாக இருக்கும்?’ என்று கேட்டாள் லட்சுமியம்மாள்.

‘நன்றாகக் கேட்டீர்கள்? இத்தனை வருஷமாக வியாதியை வைத்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது இங்கு வந்தவுடன், நாள் கணக்குக் கேட்கிறீர்களே! “ என்றார் டாக்டர் சிரித்துக் கொண்டே.

பிறகு சந்திரா, எல்லாருக்கும் நர்ஸிங்ஹோமைச் சுற்றிக் காண்பித்தாள். டாக்டருடைய பிரத்தியேக ஆலோசனை