பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோம் கலைந்தது 399

மாளுக்கும் இதே கவலைதான் இருந்தது. பட்டணத் துக்கு வந்ததிலிருந்தே சுசீலாவின் போக்கில் காணப்பட்ட மாறுதல்களைக் கண்டு லட்சுமியம்மாளின் அடிவயிற்றில் புகைந்தது. கணவரிடம் விரைவிலேயே திருமணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி லட்சுமி கூறினாள். பாகவதர், அந்தப் பொறுப்பை சந்திராவிடம் ஒப்படைத்து விட்டார்.

கல்யாணம் செய்து கொடுக்கிற விஷயத்தில் தமக்குத் துளியும் கைராசி இல்லை என்று பாகவதர் எப்போதோ தெரிந்து கொண்டு விட்டார். காயத்திரியின் கல்யாணத்தில் வாங்சிய அடி வசந்தியின் திருமணத்திலும் எதிரொலிக்கத் தவறவில்லை. அவர் வசந்தி திருமண விஷயமாகத் தலையிடாமல் இருந்திருந்தால், ஒரு வேளை எல்லாம் சுபமாக முடிந்திருக்குமோ என்னவோ? அதனால்தான் சுசீலா தன் இச்சைப்படி முடித்துக் கொண்டாள் போலும். தம் கைபடாமல், தம் கால் தூசி கூடப் படாமல் மணம் செய்து கொள்ளும் அவர்களுடைய வாழ்க்கையாவது இன்பமாக இருக்கட்டும் என்று மனமார வாழ்த்தினார்.

சேகரும், மூர்த்தியும், சந்திராவின் விருப்பப்படியே ரோஸ் கார்டன்ஸில் திருமணத்தை நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டனர். லட்சுமியம்மாளுக்கு ஏதாவது ஒரு கோயிலில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆயினும் சந்திராவின் கட்சிதான் ஜயித்தது,

ரோஸ்கார்டன்ஸ் தேவலோகம் போல் இரவும் பகலும் விழாக்கோலத்தில் ஜொலித்தது, விதம் விதமான இன்னிசை நிகழ்ச்சிகளும்; அன்புப் கலவையும் கொண்ட உபசரிப்பும் விருந்தும் வந்திருந்தோரை மயக்கின. வாயாற, மனமாற மனமக்களை வாழ்த்தினர்.

சங்கீத உலகில் ஹரிக்கு எத்தனை செல்வாக்கு உண்டு என்பதை பாகவதர் அன்றுதான் கண்டு கொண்டார்.