பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 புல்லின் இதழ்கள்

இசையினாலும், அன்பினாலும் ஹரி எத்தனை இதயங்களை வசப்படுத்தி வைத்திருக்கிறான் என்பதை அன்று வந்திருந்த ஒவ்வொருவர் முகத்திலும் தவழும் மகிழ்ச்

சியைக் கண்டே பாகவதர் அறிந்து கொண்டாா.

கல்யாணம் நடந்த சிறப்பைப் பார்த்து அதிசயிக் காதவர்களே இல்லை. டாக்டரும், சந்திராவும் ஆச்சரி யப்பட்டனர். பாகவதருடைய கலை வாரிசுக்குக் கலை யன்பர்கள் செலுத்திய அன்புப் பரிசுகள் மலைபோல் குவித்துநின்றன.

பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும்தான் பாகவதரின் சார்பில் பம்பரமாகச் சுழன்று, ஆக வேண்டிய காரியங் களைக் கவனித்துக்கொண்டனர். ஆனாலும், ஆயிரம் வந் தென்ன ஆயிரம் போயென்ன; இத்தனை சிறப்பையும் நேரில் காணவும், கலந்து கொள்ளவும் சுந்தரியும் வசந்தி யும் வராத குறை பாகவதரின் மனத்தை மட்டும் அல்ல; லட்சுமியின் உள்ளத்தையும் வாள் கொண்டு அறுப்பது போலவே இருந்தது. எத்தனைதான் வருத்தமும் மனஸ் தாபமும் இருந்தாலும் இப்படிக் காரியங்களைக் கைநழுவ விடலாமா? இப்படிப் பகைமை பாராட்டச் சுந்தரிக்குச் சுட்டுப் போட்டாலும் தெரியாதே!

திருநீர்மலையில் திருமணத்தை நடத்தினால் பாக வதர் கலந்துகொள்ள முடியாது; அதனாலேயே திரு மணம் ரோஸ் கார்டன்ஸிலேயே நடந்தது. முகூர்த்தம் ஆனதும் எல்லாரும் காரில் திருநீர்மலைக்குச் சென்றனர், பாகவதர் சற்று ஒய்வெடுக்கக் கண்களை மூடினார்.

எங்கோ ஒலிக்கும் ஆலய மணியின் ஒசை, பாகவதரின் செவிகளில் ஒலிப்பது போல் இருந்தது. சுவாமி நாதா, இனி என்று நான் உன் தரிசனத்தைக் காணப் படியேறிச் சந்நிதி முன் வந்து கைகூப்பி நிற்கப் போதிறேன்? என் கால்களை ஒடித்து இப்படி இங்கே கொண்டு வந்து கிடத்தி