பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 புல்லின் இதழ்கள்

இதற்குள், ! ஹரி, என்ன பண்ணினாய்?’ என்று லட்சுமியம்மாளும், காயத்திரியும் அங்கு வந்துவிட்டனர்.

வாயும் வயிறுமாய் இருப்பவளை இப்படி அழவிட லாமா ஹரி? என்னதான் நடந்தது? என்ன செய்து விட்டாய்? என்று ஹரியைக் கண்டித்தவண்ணம், ‘அழாதே சுசீலா நல்ல உடம்பா? இப்படிக் குலுங்கிக் குலுங்கி அழுதால் தாங்குமா? உள்ளே வா’ என்று லட்சுமியம்மாள் அழைத்துச் சென்றுவிட்டாள்.

பிறகு காயத்திரி, ஹரியிடம் சண்டையின் காரணம் கேட்டாள். ஹரி நடந்ததைக் கூறினான்.

  • இதைக் கேட்க உனக்கு இப்போது தான் சமயம் கிடைத்ததா? இவ்வளவு நாளைக்கு அப்புறமும், உனக்கு ஏன் அவள் ஞாபகம் போகவில்லை ஹரி? ‘

‘நாட்கள் ஆனால் மறந்துவிட வேண்டியதுதானா? நல்லவர்கள் கெட்டவர்கள் என்று ஒன்றும் இல்லையா? அந்தக் கடிதம் எனக்கு வந்தது; என் கையில் சேர்க்க வேண்டியதுதானே நியாயம்?’

‘யார் கண்டார்கள்? உனக்கு வந்தது என்று, அவள் உன்னிடம் சென்னாளா?”

‘'நீங்கள் பார்க்கவில்லையா?”

‘இல்லை. அவள் அதை யார் கண்ணில் காட்டினாள்? ஆயினும், நானும் பார்க்க வேண்டும் என்றுதான் இருக் கிறேன். சொன்னால் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்வாயோ என்று பயந்துதான் நான் சொல்லவில்லை.”

“இதில் என்ன குழப்பிக்கொள்ள இருக்கிறது?’’