பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புல்லின் இதழ்கள்

அப்பா வரவில்லையா?” என்று ஆவலோடு கேட்டாள். அதற்குத் தாயினிடமிருந்து பதில் வருவதற்குள், அவசரம் தாங்காமல், எப்பொழுது மாமா வந்தீர்கள்? வரப்போவதாக ஒரு கடுதாசி கூடப் போடவில்லையே?’’ என்று மாமாவிடமே கேட்டாள். -

‘கடுதாசி போட்டுத் தகவல் கொடுத்துவர நான் என்னம்மா உன் அப்பாவைப் போல் பிரபல சங்கீத வித்வானா? கிராமத்தில் நிலத்தோடும் ஆட்களோடும் மாடு கன்றுகளுடனும் போராடுவது போதாதென்று, உண்டியல் கடையில் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டுக் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் வேறே அலைந்து கொண்டிருக் கிறேன். இதற்கே நேரம் போதவில்லை. கடுதாசி எங்கே போடுவது? ஏதோ உங்களையெல்லாம் பார்க்கவேண்டு மென்று தோன்றிற்று; உடனே புறப்பட்டு வந்தேன். மேலும் முன்னே மாதிரி ஒர் இடத்துக்கு வந்து போகத் தள்ளவுமில்லை. பாரேன், இந்தப் பையைக்கூடத் தூக்கிக் கொண்டு வர முடியவில்லை’ என்றார் ஆயாசத்துடன்.

‘ஏன் மாமா, இந்த எட்டரைமணி வண்டியில்தானே வந்தீர்கள்? அதற்குத்தான் ஹரி வந்திருந்தானே? நீங்கள் ஏன் பையைத் தூக்கிக்கொண்டு வண்டிக்கு அலைய வேண்டும்? அவனிடம் சொவ்லுவதுதானே?’ என்று சுசீலா அசட்டுத்தனமாகக் கேட்டாள்.

நான் ஹரியைக் கண்டேனா, சிவனைக் கண்டேனா? இந்தப் பிள்ளையாண்டானையே நான் முன்பின் பார்த் திருந்தால் அல்லவா தெரிவதற்கு?’ என்று கேட்டார்.

ஆனால் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், உங்களுக்குத் தெரியாவிட்டால்?’ என்ற சுசீலா ஹரியைப் பார்த்து, ‘அப்பா ஊரிலிருந்து வராவிட்டால், அதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு வந்துவிட வேண்டுமா? ஸ்டேஷ னுக்குப் போன நீ மாமாவுக்குக் கொஞ்சம் உதவி செய்து அவரோடு வண்டியில் வந்திருக்கக்கூடாதா ஹரி?’ என்று