பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 புல்லின் இதழ்கள்

பணத்துக்கும் வெளிப்புகழ்ச்சிக்கும் மேற்பட்டதாக உரு வாக்கி வந்தான்.

சுசீலாவுக்கு அது முதற் பிரசவம். முதற் பிரசவத்தின் கடுமை அவனுக்கு ஒரளவு புரிந்திருந்தது: மிகவும் அதைரியமாகவும் இருந்தது.

சிக்கல் கச்சேரியில்-அவன் பாடினான் என்பதைவிட: இசையினால் இறைவன் பாதங்களைத் தொட்டுக் கதறி னான் என்பதே பொருந்தும். பஞ்சு அண்ணாவும் ராஜப் பாவும் பிடிலையும் மிருதங்கத்தையும் கீழே வைத்துவிட் டனர். எங்கோ இருக்கிற இறைவனின் திருவடிமலர் கதை, எங்கோ இருக்கிற மனித உயிர் தேடிப் பிடித்து விடத் துடிக்கிற பிரார்த்தனைகளாகவே, பாசுரங்களா கவே ஹரியினுடைய அன்றைய இசை முழங்கியது.

சுசீலாவையும், குழந்தையையும் காப்பாற்றித் தரும்படி அவன் வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோளுக்கு முருகன் மனம் இறங்கிக் கருணை செய்து விட்டாற்போல் வீட்டுக்குள் நுழைந்ததுமே மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.

அவன் சுசீலாவின் அறைக்குள் நுழைந்தான். கொடி. யொன்று மலரைத் தழுவிக் கொண்டிருப்பது போல், சுசீலா குழந்தையை அனைத்துக் கொண்டிருந்தாள்.

கணவனைக் கண்டதும் எழுந்திருக்கப் போன வளைக் கையமர்த்திய ஹரி, அவள் அருகில் அமர்ந்துகொண் டான், அதுவரை அவன் பார்த்திராத கோலத்தில், அகத்தாலும் புறத்தாலும் சுசீலா புதியதோர் அழகிய உருவில் காட்சியளித்தாள். அவன் விழிகளை இமைக்கவே இல்லை.