பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 புல்லின் இதழ்கள்

“ஆமாம், இல்லாவிட்டால் உங்களைப் புரிந்து கொள்ள இத்தனை வருஷங்கள் வேண்டி வந்திருக்குமா? பாருங்கள், இவன்கூட “ஆமாம் ஆமாம் என்று கையையும் காலையும் ஆட்டுகிறதை!’ என்று சுசீலா குழந்தையைக் காட்டினாள். ஹரி அதன் கன்னத்தில் முத்தமிட்டான்: உச்சியில் முத்தமிட்டான்.

இன்னும் வேறு எங்கேயாவது கச்சேரிக்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா?’ ‘

ஏன்?”

நேற்று நீங்கள் இல்லாமற் போய் விட்டீர்களே!’

ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனாயோ?”

‘அதெல்லாம் துளிக்கூட இல்லை . எல்லாரும் அதிச

யப்பட்டார்கள்; முதற் பிரசவம் மாதிரியே இல்லையே என்று. ‘

ஹரி மெல்லச் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறீர்கள்?’’

  • நான் நேற்று முருகன் சந்நிதியில் வேண்டிக் கொண் டது வீண் போகவில்லை.

‘ என்ன வேண்டிக் கொண்டீர்கள்?’’

‘முருகா! இது சுசீலாவுக்கு முதற் பிரசவம். முதற் பிரசவம் என்றாலே எல்லாரும் பயப்படுகிறார்கள்; பய முறுத்துகிறார்கள். நீதான் என் சுசீயைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.”

நிஜமாகவா? கச்சேரிக்குப் புறப்பட்டால் உங்க ளுக்கு அதைத் தவிர வேறு நினைவே இருக்காதே?’’