பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புல்லின் இதழ்கள்

ஆனால், ‘ஐயா வரவில்லை’ என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை.

சரியாக ஒரு மணிக்கு எல்லாருடைய சாப்பாட்டுக் கடையும் முடிந்தது. நாணா மாமா சுசீலாவின் ஜாதகத் தைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஹரி தட்டை எடுத்துக் கொண்டு இடைகழியில் வந்து உட்கார்ந்தான். காயத்திரி தண்ணிர் கொண்டுவந்து வைத்தாள்.

லட்சுமியம்மாள் பரிமாறினாள். ஹரி சாப்பிட ஆரம் பிக்குமுன், வீட்டு வாசலில் புத்தம் புதிய கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பாகவதர் இறங்குவதைக் கண்டதும் ஹரி அப்படியே எழுந்திருந்து வாசலுக்கு ஓடினான். வண் டியில் இரண்டு மூன்று பெரிய மனிதர்கள் உட்கார்ந்திருந் தாா கள.

மோட்டாரிலிருந்து தம்பூராவை ஹரி வாங்கி, உள்ளே கொண்டு போய் வைத்துத் திரும்பினான். பாகவதர் வண் டியில் இருந்தவர்களை உள்ளே வரும்படி வற்புறுத்தினார். அவர்கள் மிகவும் பணிவோடும் அன்போடும், இன்னொரு சமயம் அவசியம் வருகிறோம்’ என்று கூறி விடைபெற்றுக் கொண்டனர். அதற்குள் டிரைவர் கார் “டிக்கி” யில் இருந்த பாகவதரின் பெட்டி, படுக்கை, பழக்கூடை முதலியவற்றை எடுத்துத் திண்ணையில் வைத்தார். ஹரி அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளே போனான். பாகவதர் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார். #

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பாகவதர் இடை கழியில் சாதம் பரிமாறிய தட்டு இருப்பதைக்கண்டார். அது யாருக்காக என்று அவருக்குப் புரியவில்லை. உள்ளேயிருந்து “சுப்பராமா, வா, உன்னைத்தான் நேற்றையலிருந்து எதிர் பார்க்கிறேன்’ என்ற நாணாமாமாவின் அழைப்பு வந்தது.

‘நீ எப்போது வந்தாய் வரப்போவதாக எழுதவே இல்லையே!’ என்று பாகவதர் ஆச்சரியத்துடன் கேட்டார்.