பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# - # க மனம் செய்த மாயை 67

பிரமித்து நின்றாள். சுந்தரி, இவையொன்றும் எனக்கு வேண்டாம். இவற்றுக்கு மேலாக, இவற்றை விட எத்தனையோ ஆயிரம் மடங்கு உயர்ந்த ஒன்றை உன்னிடம் யாசிக்கப் போகிறேன். நீ தருவாயா?” என்று அவளது இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு

கேட்டார்.

குருநாதருடைய இந்தத் திடீர்ச் செய்கையும் போக்கும். சுந்தரியைத் திடுக்கிட வைத்தன. அவள் செயலற்றுச் சிலை போல் நின்றாள்.

  • நீங்கள் என்னிடம் எதை விரும்பினாலும் அதை நான் மறுக்காமல் அளிக்க சித்தமாக இருக்கிறேன். தங்கள் மனத்தில் உள்ளதைத் தாராளமாகச் சொல்லலாம். அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அதை நிறைவேற்றுவது என் கடமை’ என்று பாகவதருடைய தயக்கத்தை போக்கினாள் சுந்தரி. உடனே பாகவதர், சுந்தரி, உரிமைக்கும் கடமைக்கும் அப்பாற்பட்டதை என் மனம் நாடிவிட்டது. என் தகுதிக்கு மேல் அல்லது தகாத ஒன்றை நான் விரும்பு கிறேன் என்பதும் எனக்குப் புலனாகிறது. ஆனால் என்னால் என் எண்ணங்களினின்றும் மீள முடியவில்லை. என் மனம் உன்னையே நாடுகிறது. ஆனால் என் விருப்பத்துக்காக நீ எதையும் பலவந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. தாராளி மாக உன் மனத்திலுள்ளதைத் தெரிவிக்கலாம். அதைப் பற்றி நான் எவ்வித தப்பெண்ணமும் கொள்ள மாட்டேன். என் ஆசை தவறாக இருந்தால் என்னை மன்னித்துவிடு’ என்று பாகவதர் சுற்றிச் சுற்றிப் பேசிக் கொண்டிருந்த போதே சுந்தரி இடைமறித்துக் கூறினாள்:

நீங்கள் திண்டிய இந்தக் கரங்கள் இரண்டும்; இனி ஆயுள் முழுவதும் உங்கள் சேவைக்காகவே காத்திருக்கும். நீங்கள் விரும்பியதைக் கேட்டதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் உங்கள் மனைவியும் உலகமுமே என்னைத் துாற்று வார்கள். இந்த உலகத்தைப்பற்றிக் கவலைப்படுகிறவள்