பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புல்லின் இதழ்கள்

“சுந்தரி, ஏன் எதற்குமே பதில் பேசாமல் நின்று கொண்டிருக்கிறாய்? இதுவரை நான் என் மனப் போராட் டத்தைத்தான் கூறினேனே தவிர, என் புத்தித் தடுமாற் றத்துக்கு ஒத்துழைக்குமாறு உன்னை நான் வற்புறுத்த வில்லை. நான் மணமானவன். பேராசையால் இரண்டாந் தாரமாக உன்னையும் ஏற்க என்மனம் விழைகிறது. ஆனால் உன் இளமனத்தில் எத்தனையோ பசுமையான எண்ணங் களை நீ சுமந்து கொண்டிருக்கலாம். உன் அழகுக்கும், அறி வுக்கும், இப்போது நீ அடைந்திருக்கும் சங்கீதத்திறமைக்கும் அழகிலும் இளமையிலும் செல்வத்திலும் சிறந்த மணமகன் உனக்கு நாளையே வரலாம். அதுவே உன் விருப்பமாகவும் இருக்கலாம். ஆகவே நான் உன்னிடம் முன்பே கூறியபடி ஒரு வார அவகாசம் உனக்காக இல்லாவிட்டாலும் எனக்காக எடுத்துக் கொள்கிறேன். நீ இப்போது அவசரப் பட்டு ஏதாவது பதில் கூறிவிட்டால், என் இதயமே நின்று விடும். ஆகவே காலம் நம் இருவருக்கும் சில நாளாவது மன அமைதியைக் கொடுக்கட்டும். நான் வருகிறேன் சுந்தரி’ என்று புறப்பட்டார்.

அவள் சட்டென்று கூறினாள், “எங்கே புறப்படு கிறீர்கள்? என் வரையில் இனிமேல் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் முடிவு செய்து விட்டேன். அவளுடைய சொற்கள் கணிரென்று அவர் செவிகளில் ஒலித்தன.

என்ன சுந்தரி அதற்குள்ளாகவா? வேண்டாம்.’ சுப்பராமன் படபடப்புடன் கூறினார்.

ஏன்? இந்த அவகாசம் போதாதா? இவ்வளவு கால மில்லாமல், என்னைப் பார்த்து இப்படிக் கேட்கவேண்டும் என்று உங்களுக்கு இந்த எண்ணம் திடீரென்றுதானே எழுந்தது? அதை உடனே நிறைவேற்றுவதைத்தான் என் கடமையாக மதிக்கிறேன். உங்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டுமே என்பதைத் தவிர நான் எனக்கென்று