பக்கம்:புள்ளிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனமான ஒரே வடிவுள்ள இரு பொருள்கள். கனமானது ஒன்று, லேசானது ஒன்று, இவைகளை குறிப்பிட்ட உயரத்திலே இருந்து கீழே போட்டால் கனமான பொருள் விரைவில் பூமியை அடையும். லேசான பொருள் சற்றுத் தாமதமாக பூமியை அடையும் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்து! இதைக் கலீலியோ மறுத்தான். இல்லை இரண்டும் ஒரே கால கட்டத்தில்தான் விழும் என்று சொன்னான். அதை ஆராய்ச்சி செய்ய, கடைசியாக பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தின் மீது ஏறி இரண்டு இரும்புக்குண்டுகளைக் கீழே போட்டார்கள். וע இரண்டும் ஒரே வடிவம்: ஆனால் எடை வெவ்வேறு, அப்போது இரண்டும் ஒரே நேரத்தில் தான் விழுந்தது என்று காட்டி அரிஸ்டாட்டிலை கலீலியோ வெற்றி கொண்டார் என்பது வரலாறு. இது அரிஸ்டாட்டிலின் வரலாற்றிலே ஒரு தோல்விப்புள்ளி. ஆனால் கலீலியோ வரலாற்றிலே அவருக்கு ஒரு வெற்றிப் புள்ளி நமக்கு ஓர் என்ற வகையில் இந்த வரலாறு உண்மையை காட்டுகின்றது. நியூட்டனும் பூனைக னகளும் அதைப் போல நீங்கள் பலரும் அறிந்த ஒருவர் தான் ஐசக் நியூட்டன். அந்த ஐசக் நியூட்டனைப் பற்றி ஓர் எடுத்துக் காட்டிற்கு, நம்முடைய மொழிப் பிரச்சினையிலே கூட நமது அண்ணா அவர்கள் பலமுறை அவன்பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றார். அவன் பூனை வளர்த்தான். அவனுடைய அறைக்குள்ளேஅவன் வளர்த்த பூனை வருவதற்கும் போவதற்கும் ஒரு துளையை செய்து வைத்தான்: அதன் வழியாக பூனை வரும்: போகும். பிறகு பூனை குட்டி போட்டது. தச்சனைக் கூப்பிட்டு "அப்பா பூனை குட்டிபோட்டு விட்டது. பூனை வருவதற்கு ஏற்கனவே வழி இருக்கிறது. பூனைக் குட்டி வருவதற்கு இன்னொரு சிறிய வழி செய்" என்றான். 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புள்ளிகள்.pdf/19&oldid=1706218" இலிருந்து மீள்விக்கப்பட்டது