பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூ சி வாழ்க்கையெ னில் கவலே காணுக்

காளையர்கள் மலிந்திருக்கும் இக்கா லத்தில்

எல்லாரும் போலன்றி முத்து வேலன்

ஏட்டுடனே நாட்டு திலே பயின்ருன் செல்வம்

'ல்லாதாம் ஏக்கமுடன், கல்லார் துன்பம்; - *

ஏராள சாதி மத பேதம் யோக்க

நல்லோர்கள் சித்திக்கும் வழியில் சென்று,

நலிவுதனைக் களைவதற்கு முயல வேண்டும்

என்கின்ற முடிவோடு வெளியில் வந்தான்,

இளங்கலைஞன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு !

தன்குடும்பம் ஏழ்மையினுல் தவித்துங் கூடத்

தன்னலத்தை உதறிவிட்டான் அலுவல் வாய்ப் பு

தன்கி குத்தும் நாடவில்லை நாடு முற்றும்

தள்ளிரவில், தண்பகலில் சுற்றிச் சுற்றி,

‘ என்குறிக்கோள் கதியற்சூேர் உயர்வே !' என்ருன் :

எளியோரின் மனங்கவர்ந்த தோழன் ஆனுன் !

86