பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

எதிர்ப்.பி.ைடயே காதலனே நம்பி வந்த

இளமங்கை மேகலேதான் யாது செய்வாள்?

மதிப் புடனே வாழ்ந்துவத்த மரம ஒரே ர

மருமகனைக் காண்பதற்கும் மறுத்து விட்டார் !

கொதிப்பேறும் உள்ளத்தைக் குளிர வைத்துக்

குழந்தையினை ஆளாக்கும் உறுதி யோடு,

விதிப் பயனென் றுரைப் பாரை வெல்ல எண்ணி

விசனத்தை மறைத்தபடித் தனியே வாழ்ந்தாள்.

மறைந்துவிட்ட தங்கப்பன் நினைவால் ஒர் தான்

மனத்துயரம் மிகுந்து வர, வாழ்வில் இன்பம்

குறைந்துவிட்ட குடும்பத்தின் நிலைமை கண்டு,

குழந்தைமுகம் பார்த்துவரும் கருத்துக் கொண்டு,

நிறைந்து விழும் பால்துரையோல் நிலத்தில் தோயும்

நிலவொளியில் உலவி வரும் விருப்பத் தோடு

விரைந்துசென்றேன் மேகலையின் விடு நோக்கி ;

வெறுங்குடிசை காட்சிதரப் பின்னுல் மோனேன்.