பக்கம்:பூங்கொடி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

95

100

105

110

சுவடியின் மரபு தெரிவுறு காதை

மீனவன் செம்மாப்பு

என் காப்ப் பழிப்போர் இனியிரார் உலகில், பொன்றாப் புகழ்நூல் புகுந்ததென் கையில், இசையும் கூத்தும் இலங்கிய தமிழோ வசைபெறக் காண்பது வையகம் எங்கும் முழக்குவென் முழக்குவென் முத்தமிழ்ப் பெருமை, சழக்கர் பகைஎலாம் தவிடெனப் பொடியென ஆக்குவென், எதிர்ப்பெலாம் நீக்குவென், மாசினைத் திக்கிரை யாக்கித் தேனிசை பாடுவென், என்றவன் செம்மாங் கேறென எழுங்கனன் :

பகைவர் அடக்கம்

கூடல் நகரெலாம் கொற்றவன் தமிழிசைப் பாடல் ஒலியே பரந்தது கண்டு வாயடங் கினரே வாதுகள் செய்தோர் ; காயினும் மேலாக் தமிழினே விழைவோன்

இசையின் இயலெலாம் இசைத்தவன் இருப்புழித்

ஏமகானன் பாராட்டுரை

திசைதொறும் சென்று கன்புகழ் கிறீஇ விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான் ஏம கானன் எனும்பெயர் பூண்டோன் கோமறு மீனவன் கொண்டும், தமிழிசைப் புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக் கலைமலி காளையின் கண்முன் தோன்றி

உரவோப் இளமையில் ஒருகனி கின்றே இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும் நின்னிசைப் பணிக்கு கெடிதுவந் தனனே,

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/106&oldid=665581" இலிருந்து மீள்விக்கப்பட்டது