பக்கம்:பூங்கொடி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

90

95

100

105

110

உயர்தமிழ் மூன்றனுள் ஒன்றென நினையார் மயலறி வுடையார் மறந்தனர் வெறுத்தனர் : கல்லா மாந்தர் கையகப் பட்டது ; கில்லா தொழிந்தது நீள் புகழ் பட்டது : கற்றாேர் பலரும் முற்றுகை யிடின்அது நற்றமிழ் மரபாப் நாட்டினிற் பரவும்:

அடிகளார் விழைவு

ஆதலின் அருண்மொழி அரும்பெறற் பூங்கொடி ஒதல் வேண்டும் உயர்தமிழ் இசையை: தெருவெலாம் ஊரெலாம் சென்று நா டெலாம் உருகும் இசைத்தமிழ் ஒலித்து முழக்கி வெல்லுதல் ஒன்றே விழைந்தனென் , அதன்றலை

அடிகளார் வினவுதல்

சித்தனேக் கருக்களாஅப்ச் செந்தமிழ்ப் பாட்டால் பிந்திய மக்களைப் பேணலும் ஆகும் , ஏற்றுள நம்பணி எளிதினில் வெல்லும்; சாற்றிய மீனவன் தான்விடு சுவடியும் வேற்றிடன் புகாஅது விளைபயன் நல்கப் பூங்கொடி கையிற் புகுந்தது கல்லாப் ! ஈங்குன துளம்யாது?, என்றலும் உரைப்போள்

அருண்மொழி விடை

பெரியீர் நும்மொழி பேணுதல் ஒன்றே அறிவோம் யாங்கள், ஆதலின் என்மகள் நெறிமுறை பிறழா நேரிசைச் செல்வி கொடுமுடி தந்த கோமகள் எழிலி

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/115&oldid=665590" இலிருந்து மீள்விக்கப்பட்டது