பக்கம்:பூங்கொடி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

115

120

125

130

எழிலியின் வரலாறறிந்த காதை

உவப்பும் வியப்பும் உற்றன. கிைத் ‘தவறிலா துரைத்தனே எமது தாய்மொழி ! யாங்கனம் உணர்ந்தனை? ஈங்கெமக் குணர்த்துதி ! ஆங்கிலம் வடபுலக் காரிய மொழிகளால் தீங்குவந் துறுமென கின்னுடைத் தேய மாந்தர் பலரும் மற்றைய மொழிகளைக் காந்திய நெஞ்சொடு கனன்று வெறுத்துரை கூறுவர் என்றே கூறக் கேட்டுளேம்; ஆயினும் நீயோ அழகுற எமது தாய்மொழி புகன்றனே யாங்வனம் உணர்ந்தனே? ஈங்கெமக் குணர்த்துதி என்னலும் உரைப்போன்

தமிழரின் பரந்த மனப்பான்மை வருவிருங் தோம்பும் பெருந்திறல் உடையோப் ! வருமொழி தமக்கெலாம் வணங்கி வரவுரை கருவது தொழிலாக் கொண்டது தமிழகம் , அயன்மொழி பலவும் ஆய்ந்து தெளிந்து மயலற மொழியும் மாங்கர் பற்பலர் எம்முடை நாட்டினில் இலங்கிடல் காணுதி ! எம்மொழி யாயினும் எம்மொழி என்றதை நம்பும் இயல்பினர் நாங்கள் : இங்கிலே அறிகதில் ஐய! அமிழ்கெனும் தமிழை மறந்தும் பிறமொழி மதிக்கும் பெற்றியேம் , ஆயினும் தமிழை அழிக்கும் கருத்தின் சாயல் காணினும் கரியேம் எதிர்ப்போம் ;

பிறமொழி பயில்வோர்

மொழியியல் ஆய்வோர் முந்நீர் வணிகர் எழிலுறுங் கூத்தர் இவ்வகை மாந்தர்

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/122&oldid=665598" இலிருந்து மீள்விக்கப்பட்டது