பக்கம்:பூங்கொடி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை

வஞ்சியின் ஏக்கம்

பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக் கொஞ்சும் இளமை கொன்னே கழிய அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல நெஞ்செழுங் காதலை செருப்பினில் பொசுக்கிப் பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள், எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும் செவ்விய அவள்கிலே சிறிதும் பிறழ்ந்திலள் என்னே இவள் மனம் இருந்த வாறே ! பின்னே வாழ்விற் பேதுறு வாளே எனகினேங் தேங்கி இடருறுஉம் வஞ்சி

வஞ்சி தேன்மொழியிடம் புலம்பல்

தேன்மொழி யாகிய தெரிவையை விளித்து, மீன்விழி மாகே ! வியனிலத் தியாண்டும்

126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/145&oldid=665623" இலிருந்து மீள்விக்கப்பட்டது