பக்கம்:பூங்கொடி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

20

25

30

35

40

துறவினள் போலத் தொண்டெனும் பெயரால் இாவிடை நிகழ்த்தும் இழிசெயல் எத்தனே ! ஒருநாள் வெளிவரும் உண்மை என்றனர் : எழில்நிறை உருவமும் இளமைப் பருவமும் கழிமிக வுடையவள் காரிகை யிவள்தான் ! கலைதெரி பெயரால் கட்டிளங் காளையர் பலர்பலர் அவ்விடைப் பயில்வோர் உளரால் துறவும் தாய்மையும் கொலேவினில் ஒடி மறையும் அன்றி வாழுமோ? என்றனர் ; பாயும் புலியும் பசும்புல் வாயும் காயழல் தீயும் தாயகற் பஞ்சும் நெருங்குமேல் விளைவதை நீணிலம் அறியும்; உறுகேழ் வாகினில் ஒழுகும் நெய்யெனில் கேட்பவர் மதியும் கேடுறின் நம்புவர் ; நாட்பட விளங்கும் நயவஞ்சம் என்றனர்; பசுப்போல் இருந்தனள் பாவி இவள்தான் வெறுக்குங் கொலைத்தொழில் விளைக் கனள் என்றனர்; நல்லவர் கெட்டவர் நாமுன ராவகை உள்ளனர், என்ன உலகமிஃ தென்றனர் ; பெண்ணுருக் கொண்டுள பேயிவள் என்றனர் ; பெண்குலங் கெடுக்கும் பெற்றியள் என்றனர்; இவ்வணம் ஊரார் இடுபழி கூறினர்;

நல்லோர் வருந்துதல்

இவட்கோ இப்பழி இழைத்தவர் எவரோ! அவட்கோ கொடுஞ்சிறை ! அடஒ கொடுமை ! ஆவின் இயல்பும் அடங்கிய பண்பும் மேவிய மெல்லியற் கொடிக்கோ கொடுமை ! சொல்லும் செயலும் நல்லன புரிவோள்

178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/197&oldid=665680" இலிருந்து மீள்விக்கப்பட்டது