பக்கம்:பூங்கொடி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

165

170

175

180

185

பெருகி வழிந்தது; பெரியரை நோக்கிப்

பெருமனம் உடையீர் ! கிழத்தியின் பெயரை

அருளுதி ராயின் ஆறுதல் பெறுவேன் இவ்வனம் அருண்மொழி இாந்துரை கூறச்

நிலக்கிழார் மறுமொழி

செவ்விதின் அனைத்துஞ் செப்புவல் கேண்மோ ! கொவ்வை யிதழினள், கூரிய விழியினள், கவ்வும் வகையாற் கனியிசைத் தொழிலாள், தென்னகம் பிறந்தவள், என்னகம் கிறைந்தவள், கன்னலின் அனேயாள், காதல் மனேயாள் என்னிளம் பருவத்து முன்னம் ஒருநாள் வாணிக முறையாற் காழகம் செல்வுழித் தோணியில் அவளுருத் துணைவிழி விருந்தாக் கானலும் என்னுளங் கவர்ந்தனள் ; மறுநாள் காழக நகரின் கலைதெரி அரங்கில் ஏழிசை வல்லவள் இசையினைக் கேட்டேன் காதலும் கலையும் கனிக்கிடத் தனியிடம் குறித்துப் பலநாட் கூடிப் பழகி அவ் வொருத்தியை மணந்தென் உயிரின் மேலா மதித்து வாழ்ந்தேன் ; மனந்தவள் காதற் பரிசில் என ஒரு பச்சிளங் குழவி தருகையில் என்னைத் தணியாத் துயரில் உருகிடச் செய்துயிர் ஒடுங்கினள் யானும் மறுமணம் புரியா மனத்தினேன். ஈன்ற சிறுமியின் முகத்துச் சிரிப்பினைக் கண்டு துயரம் மறந்து துணைவிழி யிமைபோல் அயர்வொன் றின்றி அவளைப் புரந்தேன் ;

192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/211&oldid=665696" இலிருந்து மீள்விக்கப்பட்டது