பக்கம்:பூங்கொடி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

120

125

130

135

140

மேலவர் கீழவர் வேற்றுமை யில்லை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஒருவரும் இல்லை, வறியரும் இல்லே உரியரும் இல்லை, சரிநிகர் என்னும் சமநிலை கண்டனள், உடைமைகள் யாவும் உலகப் பொதுமை தடையிலே எனுநெறி தையல் கண்டனள், விண்வழிச் சென்று வெண்மதி கண்டு மண்ணிடை உலவும் மாங்கரும் கண்டனள்,

வெண்பனி குழுமவ் வியன்பெரு நாட்டில்

நண்பும் பண்பும் நற்றழிழ்ப் பயிற்சியும் மருவிய தோழர் மாசறு புலவர் உருகின் என்னும் ஒருபெயர் மாற்றிச் செம்பியன் என ஒரு செங்கமி ழாக்கிய நம்பியைக் கண்டனள், நலம்பல செறிந்த அப்பெருங் தேஎத்துச் செப்பு செப்பி நற்பொருள் பற்பல நாடித் தொகுத்துக்

ஏனைய நாட்டில் பூங்கொடி

கற்பனைக் கெட்டாக் காலங் கண்ட நற்றமிழ்ப் பணியே நாளெலாம் புரியும் பொற்றாெடி கங்கை புதுமை வளர்தரும் நாடுகள் சென்றனள் ஏடுகள் தேடினள் பீடுறு தமிழ்ப்புகழ் கூடுதல் உறுதி

பூங்கொடி மீட்சி என்றுளம் மகிழ்ந்தே இருநீர்ப் பரப்பும் துன்றிய நிலமும் தொலைவிண் வெளியும் கடந்து மீண்டனள் கலைபயில் செல்வி, இடம்படு மணிநகர் யாண்டும் ஆர்ப்பொலி படர்ந்திட வாழ்த்துரை பாவை ஏற்றனள்,

210

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/229&oldid=665715" இலிருந்து மீள்விக்கப்பட்டது