பக்கம்:பூங்கொடி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

165

170

175

சொற்போர் நிகழ்த்திய காதை

சொன்னேர் யாாே? முன்னேர் அவரினும் முற்பட வாழ்ந்தவர் எப்பெய ருடையார்? அப்பெரு முன்னேர் ஆண்டவன் மாட்டுச் செப்பிய மொழிஎது? செந்தமி ழன்றாே? திருவாய் மொழியெனத் திருவா சகமென இறைவா! இறைவா! என்றவர் ஒதிய திருவாய் மொழிஎது? திங்கமி ழன்றாே? அவரெலாம் முன்னே ரல்லரோ? இறைவன் செவிதனில் அம்மொழி சேர்ந்ததும் இலேயோ?

மந்திர வலிமை தமிழ்மொழிக்குண்டு

அரவணி இறைவனே ஆரூர் நம்பி இரவிடைப் பாவைபால் ஏவிய தெம்மொழி: இடங்க ருண்ட இளஞ்சிறு மகனே உடம்பொடும் உயிரொடும் உய்வித்த தெம்மொழி: ஒடுங்கிய எலும்பினே உருவெழில் குறைவிலா மடந்தையின் வடிவா மாற்றிய தெம்மொழி: அருமறை வினைஞரால் அடைபடு கதவம் திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி? கணிகனன் முன்செல மணிவணன் அடியிணே பணிதிரு மழிசையர் பதறினர் பின்செலப் படப்பாய் அனேமேல் பாற்கடல் மிசையே கிடப்போன் தன்மனேக் கிழத்தியும் உடன்வர

180 அரவணைச் சுருட்டோ டாங்கவர் தொடர்ந்து

185

பரிவுடன் ஒடப் பண்ணிய தெம்மொழி? அம்மொழி கம்மொழி! அத்துணைப் பெருமையும் செம்மையின் எமக்கெலாம் செப்பியோர் நீவிரி ! இன்றிவை மறந்தீர்! எதிர்ப்புரை கிளந்திர் ! கன்றிய மனத்தாற் காவுரை புகன்றீர்!

219

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/238&oldid=665725" இலிருந்து மீள்விக்கப்பட்டது