பக்கம்:பூங்கொடி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

20

25

0

35

40

அறப்போர் நிகழ்த்திய காதை

பவழ இதழால், பைங்களிர் விரலால், பொற்புடை நுதலால், புருவச் சிலையால் , உட்குறிப் புணர்த்தும் மெய்ப்பா டனைத்தும் கெற்றென விளக்கிக் தெரிவையர் ஆடுங் கலையெழிற் றிறமெலாம் பலபடப் புகழ்ந்தனர்

தென்னட்டார் தெளிவுரை

முத்தமிழ்க் காவலர், மொழித்துறை ஆய்வினர், புக்கமு. கென்னப் புதினம் படைக்குநர், செந்தமிழ்க் காவலர், சிங்கனப் பாவலர், பைந்தமிழ் நாவலர், பன்மொழிப் புலவர், பல்பொரு ளுணர்ந்த பண்டகர், அருள்செறி மல்கிய துறவற மாண்பினில் உறையுநர், குறள்நெறி ஒம்பிக் குடியா சோங்க அறநெறி காக்கும் அரசியல் அறிஞர் , பிறபிற கட்சிகள் பேணுதற் றலைவர், பல்வகைச் சமயப் பாங்கினில் ஓங்கிய நல்வகைப் பொருளுணர் நற்றமிழ் வல்லவர், இசையின் அரசர், ஏழிசை வல்லவர், நசைமிகு திரைப்பட நடிகர், பல்வகை ஏடுகள் நடாத்தும் இயல்பினர் யாரும் கூடினர் சக்தம் கோட்பா டனேத்தும் நாடும் வகையால் நன்கனம் விளக்கினர்; அவரவர் கோட்பா டறைக்கன ராயினும் தவறியும் தமிழின் தன்மை குறைத்திலர் , வழியும் முறையும் வகைபல வாயினும் மொழியின் உயர்வே முன்னினர் அவர்காம்; நான்கு முடிபுகள் கவரும் முறையால் கனிமொழி காக்க அவரவர் நோக்கில் அறைந்தவை யாவும் உவகையிற் கேட்ட உயர்பே ரடிகள்

223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/242&oldid=665730" இலிருந்து மீள்விக்கப்பட்டது