பக்கம்:பூங்கொடி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

150

155

160

165

170

இருப்பதும் ஒருயிர் இறப்பதும் ஒர்முறை தடுத்திட ஒல்லுமோ? சாவதும் ஒருதலை , விடுக்குமவ் வோருயிர் வினிற் செலவிடா தடுத்தகம் தாய்மொழி அரியணை வீற்றிடக் தொடுத்திடும் போரில் விடுத்திடத் துணிக ! துணிவோ ரெவரோ அவரே வருக ! துணிவில ராயின் தொலைவிற் செல்க !

நாட்டவர்க்கு வேண்டுகோள்

செல்வோர் தாமும் செய்வதொன் றுளது வெல்போர் கருதி விடுதலைப் படையினர் சிறையகம் புகுந்தும் உறுதுயர் அடைந்தும் கையுங் காலும் மெய்யும் சிதைந்தும் நையும் உயிரொடு நடைப்பின மாகியும் ஆளுநர் செயலால் அல்லற் பட்டுழிக் கோளும் குறையும் கூறித் திரியாது கண்ணிர் ஒருதுளி காட்டுக; இலையெனில் உண்ணிறை பரிவொடும் ஒருமொழி புகல்க ! அங்கிலை தானும் ஆற்றி ராயின் செல்லல் எமக்குச் செய்யா தமைக! அல்லன கூறுதல் அறவே விடுக என்பன கூறி யிருந்தனர் ஆங்கண் ;

போர்க்கொடி உயர்த்த்ல்

புலிகிகர் வீரர் பொற்றாெடி மகளிர் கலைமலி தமிழைக் கற்றறி புலவர் எவ்வகைத் துயரும் ஏற்றிடும் திறலோர் அவ்வயின் யாம்யாம் ஆருயிர் ஈகுதும் என்றுரைத் தெழுந்தனர் எடுத்தனர் வஞ்சினம்

228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/247&oldid=665735" இலிருந்து மீள்விக்கப்பட்டது