பக்கம்:பூசைப் பாமாலை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மனத்தில்ஒர் தூய்மை இல்லை ; வாயில்ஒர் இன் சொல் இல்லை ; சினத்தினுல் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா ! புனத்துழாய் மாலை யானே ! பொன்னிசூழ் திருவ ரங்கா ! எனக்குஇனிக் கதிஎன் சொல்லாய் ! என்னே ஆ ளுடைய கோவே ! -தொண்டரடிப்பொடியாழ்வார். 20 என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என் பெலாம் உருக நீ எளிவந்து உன்னே என் பால் வைத்து எங்கும்எஞ் ஞான்றும் ஒழிவுஅற நிறைந்தஒண் சுடரே ! முன்னே என் பாசம் முழுவதும் அகல முகத்தலே அகத்து அமர்ந்து எனக்கே கன்னலும் பாலும் தேனும் ஆர் அமுதும் கனியுமாய் இனியையா யினேயே ! - கருவூர்த்தேவர். 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/107&oldid=836315" இலிருந்து மீள்விக்கப்பட்டது