பக்கம்:பூசைப் பாமாலை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வையம் தகளியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக-செய்ய சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று. - - பொய்கையாழ்வார். 24 அப்பு அணி சடைஎன் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே ! இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட்டு இந்தநாள் வரையும்என் தனக்கே எப்பணி இட்டாய், அப்பணி அலது.என் இச்சையால் புரிந்தது.ஒன்று இலேயே ! செப்புவதுஎன், நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் ! - இராமலிங்க சுவாமிகள். 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/109&oldid=836317" இலிருந்து மீள்விக்கப்பட்டது