பக்கம்:பூசைப் பாமாலை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நயஉரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும் செழுங்கருனே ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ஆடிக் களிக்கும் மயிலே உன் பாதம் அடைக்கலமே ! - தேசிக விநாயகம் பிள்ளை. 40 தனம்தரும் ; கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம்தரும் ; தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம்தரும் ; நல்லன எல்லாம் தரும் ;அன்பர் என்பவர்க்கே, கனம்தரும் பூங்குழ லாள் அபி ராமி கடைக்கண்களே. - அபிராமிப்பட்டர். i 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/117&oldid=836326" இலிருந்து மீள்விக்கப்பட்டது