பக்கம்:பூசைப் பாமாலை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 நற்பதத்தார் நற்பதமே ! ஞான மூர்த்தி ! நலஞ்சுடரே! நால்வேதத்து அப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்குஅரிய சூழலாய் ! இது உன் தன்மை! நிற்பதுஒத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற கற்பகமே ! யான் உன்னே விடுவேன் அல்லேன் ; கனகமா மணிநிறத்துஎம் கடவு ளானே ! - அப்பர். 44 தெரியேன் பாலக ளுய்ப்பல தீமைகள் செய்துவிட்டேன் ; பெரியேன் ஆயின. பின் பிறர்க் கேஉழைத்து ஏழையானேன் ; கரிசேர் பூம்பொழில் சூழ்கன - மாமலே வேங்கடவா ! அரியே! வந்தடைந் தேன் ;அடி யேனையாட் கொண்டு.அருளே ! - திருமங்கையாழ்வார். | 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/119&oldid=836328" இலிருந்து மீள்விக்கப்பட்டது