பக்கம்:பூசைப் பாமாலை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மேல்வைத்த வானேர் பெருமான் போற்றி! மேல் ஆடு புரமூன்றும் எய்தாய் போற்றி! சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச் சிலேளடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி ! கோலத்தால் குறைவுஇல்லான் தன்னை அன்று கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி ! காலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றி ! கயிலை மலையானே ! போற்றி! போற்றி! - அப்பர். 50 துப்புஉடை யாரை அடைவது எல்லாம் சோர்வுஇடத் துத்துனே யாவர் என்றே , ஒப்பு:இலேன் ஆகிலும் நின் அ டைந்தேன், ஆனைக்கு நீஅருள் செய்த மையாள் ; எய்ப்புஎன்னே வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் ; அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ; அரங்கத்து அரவு அண்ைப் பள்ளி யானே ! - பெரியாழ்வார். 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/122&oldid=836332" இலிருந்து மீள்விக்கப்பட்டது