பக்கம்:பூசைப் பாமாலை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 மாவடு வகிர் அன்ன கண்ணிபங் கா! நின் மலர் அடிக்கே கூவிடு வாய் !கும்பிக் கேஇடு வாய் ! நின் குறிப்பு அறியேன் ; பா இடை ஆடு குழல்போல் கரந்து பரந்ததுஉள்ளம் ; ஆ கெடு வேன்;உடை யாய் அடி யேன் உன் அடைக்கலமே. - மணிவாசகர். 56 வங்கத்தால் மாமணிவந்து உந்தும் முந்நீர் மல்லையாய் மதிள் கச்சி ஊராய் ! பேராய் ! கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் , பங்கத்தாய் ! பாற்கடலாய் ! பாரின் மேலாய் ! பணிவரையின் உச்சியாய் ! பவள வண்ணு ! எங்குஉற்ருய் ! எம்பெருமான் ! உன்னை நாடி ஏழையேன் இங்ாவனமே உழிதரு கேனே. - திருமங்கையாழ்வார். 118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/125&oldid=836335" இலிருந்து மீள்விக்கப்பட்டது