பக்கம்:பூசைப் பாமாலை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அழுக்கு மெய்கொடுஉன் திருவடி அடைந்தேன் ! அதுவும் நான்படப் பாலதுஒன்று ஆல்ை! பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் ! பிழைப்பன் ஆகினும் திருவடிப் பிழையேன். வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம் ; ஒழுக்க என்கனுக்கு ஒருமருந்து உரையாய் ! ஒற்றி யூர்எனும் ஊர்உறை வோனே ! - சுந்தார். 58 வெங்கட்திண் களிறு அடர்த்தாய் ! வித்துவக்கோட்டு அம்மானே ! எங்குப்போய் உய்கேன் உன் இணை அடியே அடையல்அல்லால் ; எங்கும்போய்க் கரைகாணுது எறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்புஏறும் மாப்பறவை போன்றேனே. --குலசேகராழ்வார். 119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/126&oldid=836336" இலிருந்து மீள்விக்கப்பட்டது