பக்கம்:பூசைப் பாமாலை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கற்றவர் விழுங்கும் கற்பகக் கணியைக் கரையிலாக் கருணைமா கடலே மற்றவர் அறியா மாணிக்க மலேயை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புறங்கள் செற்றாம் சிவனேத் திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னேக் கண்டுகண்டு உள்ளம் குளிரான் கண்குளிர்ந் தனவே. - சேந்தனர். 90 திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் செழுங்கனியே! கொழும்பாகே! தேனே! தெய்வத் தருமகனைக் காத்தருளக் காத்தே வென்றித் தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே! இருமையும்என் உளத்து அமர்ந்த இராமநாமத்து என் அரசே என்அமுதே! என்தா யேநின் மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ! மனம் தளர்ந்தேன்; அறிந்தும்அருள் வழங்கி லாயே. - இராமலிங்க சுவாமிகள். 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/142&oldid=836354" இலிருந்து மீள்விக்கப்பட்டது